அண்ணே! மீண்டும் முதலில் இருந்தா? கருணாநிதி சிலை திறப்பு: அடடே வைகை புயலும் வந்திருந்தாங்க...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலும் கலந்து கொண்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மனவருத்ததால் திமுக பக்கம் சாய்ந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் நடிகர் வடிவேலு, அதன் பின்னர் அவரது திரை பயணம் பிரகாசிக்கவில்லை.
இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வடிவேலும் கலந்து கொண்டது திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. திரை உலக சிக்கல்களில் சிக்கி தவிக்கிறார் வடிவேலு.,
வடிவேலு மீண்டும் திமுக நிகழ்ச்சிக்கு வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது
அண்ணே! மீண்டும் முதலில் இருந்தா?