ஆந்திராவில் இன்று கரையை கடக்கிறது பெய்ட்டி புயல்: கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை

பெய்ட்டி புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்க உள்ளதால், வட தமிழகத்தில் கடலோர மமவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நகர்ந்து வருகிறது. பெய்ட்டி என பெயரிடப்பட்ட இந்த புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது. இதனால், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பெய்டி புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 430 கி.மீ தொலைவில் நிலைகொண்டு உள்ளது. இது, 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது தீவிர புயலாக வலுப்பெற கூடும் என்றும், மசூலிப்பட்டினத்துக்கும் - காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கக்கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்.

சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடனே காணப்படும் என்றும் புயல் நகர்ந்து செல்வதால், சாரல் மழையோ அல்லது மிகுதியான காற்றோ வீசலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

More News >>