நான் வர மாட்டேன் என நினைத்தார்கள்! - ஸ்டாலினுக்குப் பதில் கொடுத்த ரஜினி

அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை செம்மொழி பாடல் ஒலிக்க சோனியா காந்தி திறந்து வைத்தார்.

திறக்கப்பட்ட கருணாநிதி சிலையை ராகுல் காந்தி தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். அதனை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில், அறிவாலயத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ரஜினி முகம் தென்படவில்லை. கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி பற்றிப் பேட்டியளித்த ரஜினியும், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது என்றதோடு ஒதுங்கிக் கொண்டார்.

அரசியலில் ஈடுபடப்போகிறேன் என ரஜினிகாந்த் அறிவித்த நாள் முதலாக, அவர் மீது கடும் கோபத்தில் இருந்தார் ஸ்டாலின். கோபாலபுரத்துக்கே வந்து அவர் கருணாநிதியை சந்தித்தபோதும் முகத்தைக் கடுகடுவென வைத்திருந்தார். அந்த சந்திப்பிலும், தமிழ்நாட்டில் ஆன்மிக அரசியல் எடுபடாது எனப் பேட்டியும் கொடுத்தார் ஸ்டாலின். இந்தக் கோபத்தைப் புரிந்து கொண்டாலும் எதையும் பேசாமல் சினிமா வேலைகளில் பிஸியாக இருந்தார் ரஜினி. தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேசியபோதும், பத்து பேர் ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி எனக்கூறி, மோடிக்கு ஆதரவாகப் பேசினார். இந்தப் பேச்சுக்கள் பிஜேபிகாரர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

நேற்று நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காமல் டெல்டா மாவட்டத்துக்குச் சென்றுவிட்டார் கமல். இந்த நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்க மாட்டார் என நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார் ரஜினி. இது தொடர்பாகப் பேசும் மக்கள் மன்ற பொறுப்பாளர்கள், 'இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற பேச்சு இருந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு பலரும் ரஜினிக்குப் போன் செய்து பேசினார்கள். அவர்களிடம் பேசியவர், ' நான் கலந்து கொள்ள மாட்டேன் என நினைத்து அழைப்பு கொடுத்தார்கள்.

அந்த இடத்தில் ராகுல் காந்தியை பிரதமராகச் சொல்லப் போகிறார்கள் என்பது தெரியும். மோடி தான் பிரதமர் நான் பேசியிருக்கிறேன். ஸ்டாலின் பேசுவார் எனத் தெரிந்துதான் பங்கேற்றேன். நான் வராமல் ஒதுங்கிவிடுவேன் என நினைத்தார்கள். நான் கலந்து கொண்ட வந்த பிறகு என்னிடம் பேசிய கருணாநிதி ஆதரவாளர்களும், நீங்கள் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி எனக் கூறினார்கள். நான் பெரிதும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. அந்தவகையில் நிகழ்ச்சிக்குச் சென்றதில் மகிழ்ச்சிதான்' எனப் பேசினார்' என்கின்றனர்.

-அருள் திலீபன்

More News >>