8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த தனுஷ், ஜி.வி. பிரகாஷ் கூட்டணி!

ஆடுகளம் படத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து ஜி.வி. பிரகாஷுடன் கரம் கோர்த்துள்ளார் தனுஷ்.

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் தற்போது நாயகனாக நடித்து வரும் ஜெயில் படம் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான அபர்ணதி நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை பாட தனுஷுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். முன்னதாக காற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஜெயில் படத்தின் ஒரு பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணியில் இணைந்த தனுஷ் தற்போது ஆடுகளம் படத்திற்கு பிறகு ஜி.வி. பிரகாஷுடன் கூட்டணி வைத்துள்ளார்.

More News >>