அக்ஷய் குமார், ஜான் ஆபிரஹாமுடன் மோதும் பிரபாஸ்!

பிரபாஸின் சாஹோ படம் அடுத்த ஆண்டு சுதந்திர தின சிறப்புத் திரைப்படமாக ஆகஸ்டு 15ம் தேதி வெளியாகிறது.

பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சாஹோ படம் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அதே நாளில் அக்‌ஷய் குமாரின் மிஷன் மங்கள் மற்றும் ஜான் ஆபிரஹாமின் பாட்லா ஹவுஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதால், இந்திய அளவில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இந்த கடும் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என மூன்று பேர் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் போட்டியிட்டு வருகின்றனர்.

1500 கோடி ரூபாய் வசூல் செய்த பாகுபலி மூலம் பிரபாஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் சேர்ந்திருப்பது இந்த போட்டியில், அவரை வெற்றியாளராக்க உதவும் என சினிமா வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

 

 

More News >>