இதில் விஜய்யை ஓவர்டேக் செய்த அமலாபால்!
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்பிடிக்கும் காட்சி ஒன்றை வெளியிட்டு புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார்.
சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி வெளியானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அன்புமணி ராமதாஸ் பகிரங்மாக எதிர்ப்பு தெரிவிக்க அந்த ஃபர்ஸ்ட் லுக் காட்சி நீக்கப்பட்டது.
ஆனால், அதற்கடுத்து நடிகை ஸ்ரேயா, ஹன்சிகா போன்ற நடிகைகள் புகைப்பிடிக்கும் காட்சிகளை வெளியிட்டும் எந்தவொரு அமைப்பும் எந்தவொரு சர்ச்சையையும் கிளப்பவில்லை. நடிகை ஹன்சிகா மஹா படத்தின் போஸ்டரில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்டார். அதற்கு ஏதோ ஒரு சிறிய அமைப்பு பட விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்தது. ஆனால், அது படத்திற்கும் கைக் கொடுக்கவில்லை. ஹன்சிகாவுக்கு எதிராகவும் திரும்பவில்லை.
இந்நிலையில், நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் வண்டி வண்டியாக புகையை ஊதித் தள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது பூகம்பமாகுமா? இல்லை புஷ்பானமாகுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.