ஹிரித்திக் ரோஷனை கவர்ந்த தமிழ் படம் எது தெரியுமா?
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கு பிடித்த தமிழ் படம் என்றால் அது விக்ரம் வேதா தானாம்.
பாலிவுட்டின் ஹேண்ட்சம் ஹன்க் என்றால் அது நிச்சயம் ஹிரித்திக் ரோஷன் தான். அவர் நடித்த தூம் 2 படம் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது.
ஆனால், சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய வெற்றியை ஈட்டாததால், முன்னணி நடிகர் பட்டியலில் இருந்து கொஞ்சம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். புதிதாக வந்த ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் எல்லாம் இவரை ஓவர்டேக் செய்துவிட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்த ஹிரித்திக் ரோஷனிடம், உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு எப்போதுமே சூப்பர்ஸ்டார் ரஜினிதான் என பதில் கூறியுள்ளார்.
மேலும், உங்களை கவர்ந்த தமிழ் சினிமா எது என்ற கேள்விக்கு, மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா சிறப்பான படம் என்றும், தான் அதை பலமுறை பார்த்து ரசித்ததாகவும் தெரிவித்தார்.