12வது ஐபிஎல் போட்டி: ஜெய்ப்பூரில் இன்று வீரர்கள் ஏலம்
12வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று மதியம் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.
12வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், 12வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதிலிருந்து, 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
இன்று மதியம் 2.30 மணியளவில் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இதனை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றனர்.
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி கேப்பிட்டல் அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20.95 கோடியையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.20 கோடியையும், மும்பை இந்தியன்ஸ் அணி 11.15 கோடியையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ.9.70 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடியையும் வீரர்களை வாங்க செலவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.