நேரு குடும்ப கூஜாவா ஸ்டாலின்? வேட்டி கட்டிய தமிழன் ப.சிதம்பரம் பிரதமராவதை தடுப்பதா? கொதிக்கும் அழகிரி ஆதரவாளர்கள்
காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரான ப.சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் நேரு குடும்பத்து கூஜாவைப் போல ராகுல் காந்தியை ஸ்டாலின் எப்படி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம்? என கொதிக்கின்றனர் மு.க. அழகிரி ஆதரவாளர்கள்.
”முக.அழகிரி ஆதரவாளர்கள்” என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:
காங்கிரஸே ராகுலை பிரதமராக அறிவிக்க தயங்கும் போது, ஸ்டாலின் ராகுலை பிரதமராக முன்மொழிகிறார் என்றால் காந்தி குடும்பத்தின் கொத்தடிமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பா.சிதம்பரம் போன்ற மிக மூத்த காங்கிரஸ்காரர்கள் இருக்கும் போது, இதுவரை மத்திய அமைச்சரவையிலேயே பங்கேற்காத ராகுலை பிரதமராக அறிவிப்பது உசித்தமா., பிரதமர் பதவி என்ன அவங்க குடும்ப சொத்தா???
ஒரு வேட்டி கட்டிய தமிழன் பிரதமராவதை தடுப்பதே திமுகவின் வழக்கம். 1996 மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பிருந்தும், தேவகவுடா கன்னடரை பிரதமராக்கினார் கலைஞர்.
மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜிக்கு அடுத்த மிகமூத்த சீனியர் பா.சிதம்பரம் இருக்கிறார்.
தேர்தலுக்கு பிந்தைய ஆலேசனையில் தமிழக 40எம்பிக்கள் ஒருமித்த குரலாக பா.சிதம்பரத்தை முன்மொழிந்தால் காங்கிரஸ் ஏற்க வாய்ப்பு உண்டு.
ஆனால் ராகுலுக்கு கூஜா தூக்கி இன்னெரு வேட்டி கட்டிய தமிழன் பிரதமர் ஆவதை தடுக்கிறாரா ஸ்டாலின்.
இவ்வாறு முக.அழகிரி ஆதரவாளர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.