விஜய்63 படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள்!
விஜய் 63 படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் தனது 63வது படத்தை நடிக்கவுள்ளார், இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியது. மேலும் விவேக்கும், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
இந்நிலையில், படத்தில் விஜய்யுடன் இரண்டு இளம் நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். பரியேறும் பெருமாள் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த கதிரும், மேயாதமான், மெர்குரி போன்ற படத்தில் நடித்த இந்துஜாவும் நடிக்கிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது.
இந்த படத்தில் விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகள் கூறப்போவதாக கூறியுள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் துவங்க இருக்கிறது. படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.