சாலையோரம் பெட்டிக் கடைகள் வைக்க ஆதார் அவசியம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சாலையோரம் பெட்டி கடைகள் வைப்பதற்கு கடை உரிமையாளர்கள் கட்டாயமாக ஆதார் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் எல்லா தனியார் மற்றும் பொதுத்துறைகள் சார்ந்த சலுகைகள் மற்றும்  சேவைகள் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற சட்டம் நிறைவேற்றபட்டு வருகிறது. செல்போன், சமையல் எரிவாயு மானியம், வங்கி கணக்கு, போன்ற பல சேவை மற்றும் அத்யாவசிய தேவைகளுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது சிறு தொழில் செய்வோரும் இதன் வரன்முறையில் கொண்டுவரபட வுள்ள நிலையில், சென்னையில், சாலையோரங்களில் பெட்டிக்கடைகள் வைக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், ஆதார் கட்டாயம் என்பதை நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், “ஒரு கடைக்கு அனுமதி பெற்றவர்கள் மீண்டும் வேறு ஒரு இடத்தில் கடைக்கு அனுமதி பெறாத வகையில் ஆதார் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் அருகே பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது.

பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது” என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அரசின் பல்வேறு துறைகளில் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையில் பெட்டிக்கடைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

More News >>