அது என்னடா பொம்பள தல சாய் பல்லவிக்கு மீம்ஸ் ரெடி பண்ணும் அஜித் ரசிகர்கள்!

மாரி2 படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரோபோ சங்கர் சாய் பல்லவிக்கு ‘பொம்பள தல’ என்ற பட்டம் சூட்டினார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷின் உண்டர்பார் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் மாரி 2 படம் வரும் டிசம்பர் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனை புரமோட் செய்யும் விதமாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பை படக்குழு நடத்தியது.

இதில், கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி புடவை அணிந்து வந்து பலரையும் கவர்ந்தார். மேடையில் பேசிய வரலட்சுமி சரத்குமார் தனுஷ், தனி காட்டு ராஜா, அவருக்கு போட்டியே கிடையாது என்றார். மேலும், அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை வெளிக்காட்ட படத்தில் வரும் 5 அல்லது 6 காட்சிகள் போதும் என வரலட்சுமி தனுஷை புகழ்ந்தார்.

பின்னர் பேசிய தனுஷ், இந்த படத்தில் ரோபோ சங்கர் வேண்டாம் செட்டாக மாட்டார் என ஒத்தக் காலில் நின்றேன். ஆனால், பாலாஜி மோகன் ரோபோ சங்கர் மீது வைத்த நம்பிக்கை என்னை மிரளவைத்தது என்றார்.

அதன் பின்னர் பேசிய ரோபோ சங்கர் சாய் பல்லவி இந்த படத்தில் வெளுத்து வாங்கியுள்ளார். படம் பார்த்த பிறகு அவரை ரசிகர்கள் அனைவரும் ’பொம்பள தல’ என அழைப்பார்கள் என்றார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, அது என்னடா பொம்பள தல எப்போதுமே ஒரே தல அது எங்க தல அஜித் மட்டும் தான் என அஜித் ரசிகர்கள் மீம்ஸ் ரெடி பண்ண துவங்கிவிட்டனர்.

More News >>