வடசென்னை 2ம் பாகம் ஒதுங்கும் தனுஷ் விடாத கருப்பாய் துரத்தும் வெற்றிமாறன்!
வடசென்னை படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என நடிகர் தனுஷ் எதிர்பார்த்தார். ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் அப்செட்டில் உள்ளார் தனுஷ்.
வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான வடசென்னை படம் பல சர்ச்சைகளில் சிக்கியது. அதிகப்படியான கெட்டவார்த்தை வசனங்கள், ஜெயலலிதாவை கீழே தள்ளி விடும் ரியல் வீடியொ, ஆண்ட்ரியாவின் அந்த காட்சி என படத்தில் சர்ச்சைக்கு பற்றாக்குறையே இல்லை.
மேலும், வடசென்னை மக்கள் அனைவரையும் இயக்குநர் வெற்றிமாறன் கொள்ளைக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும் சித்தரித்ததாக வடசென்னை மக்கள் புகார் கொடுத்தனர்.
அவர்களிடம் மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன் பல காட்சிகளை மறுதணிக்கையில் வெட்டினார். சில இடங்களில் வசனங்களுக்கு மியூட் கொடுத்தார்.
ஆனாலும், படம் பெரிதாக பேசப்படவில்லை. வசூல் ரீதியாகவும் ஓடவில்லை. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் எடுப்பதில் நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டுவதில்லையாம்.
ஆனால், இயக்குநர் வெற்றிமாறனோ, எப்படியாவது இரண்டாவது பாகம் மற்றும் மூன்றாவது பாகத்தை எடுத்துத் தீரவேண்டும் என தனுஷை தொல்லை செய்து வருகிறாராம். முதல் பாகத்தில் விட்டதை இரண்டாவது பாகத்தில் பிடித்து விடலாம் என சொல்கிறாராம்.
ஆனால், தனுஷுக்கு இதில், உடன்பாடு இல்லையென்றும், அவர் புதிய புராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.