இந்தியளவில் டிரெண்டான மணிகர்ணிகா டிரைலர்!
ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் வாழ்க்கை வரலாறு படமான மணிகர்ணிகா படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
குயின் படத்தில் தேசிய விருது வென்ற நடிகை கங்கனா ரனாவத், அடுத்தடுத்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். மணிகர்ணிகா படத்தின் மூலம் இயக்குநராகவும் முன்னேறியுள்ளார். இயக்குநர் க்ரிஷ் உடன் இணைந்து மணிகர்ணிகா எனும் பிரம்மாண்ட படத்தை கங்கனா ரனாவத் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
இன்று வெளியான மணிகர்ணிகா படத்தின் டிரைலர் காட்சிகள் பத்மாவத் படம் போன்று ஒளிப்பதிவில் ஆங்கில படங்களுக்கு போட்டி போடும் அளவுக்கு உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் பாகுபலி படத்திற்கு ஈடாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு அழகு மிளிர்கிறது. ராணியாக, தாயாக, சுதந்திர போராட்ட வீரமங்கையாக, வெள்ளையர்களை கொல்லும் வேட்டைக்காரியாக கங்கனா ரனாவத் தான் ஒரு நடிப்பு ராட்சஷி என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.
வரும் ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகிறது.