தமிழக வீரருக்கு இத்தனை கோடியா? வாயை பிளக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!
ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலம் இறுதிகட்டத்தை எட்டியது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் 8.4 கோடிக்கு ஏலம் போனார்.
இந்த ஆண்டின் அதிகபட்ச ஏலத் தொகையாக 8.4 கோடி ரூபாய் உள்ளது. முன்னதாக உனாத்கட் 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் 8.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.
இதில், வேடிக்கை என்னவென்றால், இவர் இதுவரை இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது தான்.
மேலும், சமீபத்தில் 5 சிக்ஸர்கள் விளாசிய மும்பையை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷிவம் டுபேவை பெங்களூர் அணி 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
சாம் குர்ரானை 7.20 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கைப்பற்றியது.
இதனால், வரும் ஐபிஎல் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது என அந்த அணியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.