ஒருவழியாக ஏலம் போனார் யுவராஜ் சிங்!

ஐபிஎல் ஏலத்தில் விலை போகாமல் இருந்த யுவராஜ் சிங்கை 1 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.

ஆறு சிக்ஸர்கள் அடித்து ஒரு காலத்தில் சிங்கமாக இருந்த யுவராஜ் சிங்கை தற்போது ஏலம் எடுக்கவே ஆளில்லாமல் நடு சந்தியில் நிறுத்தினர். அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

இளம் இந்திய வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். ஆனால், அதிரடி ஆட்டக்காரர் மற்றும் முன்னாள் பஞ்சாப் அணியின் கேப்டனான யுவராஜ் சிங்கை இம்முறை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. இந்திய அணியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டதும், தொடர்ச்சியான சொதப்பல் ஆட்டங்களுமே இதற்கு காரணம் என விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும், இலங்கை வீரர் லஸித் மலிங்காவை 2 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது.

 

More News >>