பழைய பன்னீர்செல்வமாக திரும்புவார்? சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா பயணம்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் 2ம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனால், கட்சிப் பணிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வுப் பெற்று வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்ற விஜயகாந்த் அங்கேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளாமலேயே விஜயகாந்த் தமிழகம் திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2ம் கட்ட சிகிச்சைக்காக நேற்று விஜயகாந்த் அமெரிக்கா சென்றார். சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்ட விஜயகாந்த், அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளார். அவரது மனைவி பிரேமலதா மற்றும் இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பழைய பன்னீர்செல்வமாக வருக!