ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியின் தனிக்கட்சி ஆட்டம்- பிப்ரவரியில் அறிவிப்பு?

அழகிரிக்கு திமுகவில் 'நோ ரீ எண்ட்ரி’..ஸ்டாலின் திட்டவட்டம்! உதயமாகிறது கலைஞர் திமுக?

திமுகவில் மீண்டும் தம்மை சேர்க்கப்போவதில்லை என்பது திட்டவட்டமான நிலையில் தனிக்கட்சி தொடங்குகிறார் அழகிரி. இது தொடர்பான அறிவிப்பை பிப்ரவரியில் அழகிரி வெளியிடக் கூடும் என அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவில் தமக்கு மூடப்பட்ட கதவு இனி திறக்கப் போவது இல்லை என்பதை நன்றாக உணர்ந்துவிட்டார் அழகிரி. இதனால் தனிக்கட்சி தொடங்கும் நிலைக்கு அழகிரி தள்ளப்பட்டிருக்கிறார்.

அழகிரி தரப்பைப் பொறுத்தவரை, நாம இல்லாமல் திமுகவால் ஜெயிக்க முடியாது என்கிற கருத்தில் உறுதியாக இருக்கிறது. தற்போது இவ்வளவு தூரம் இறங்கிப் போயும் ஏறெடுத்து பார்க்காமல் ஸ்டாலின் தரப்பு புறக்கணிக்கிறதே என்கிற கொந்தளிப்பில் இருக்கிறது அழகிரி முகாம்.

இதற்கு பதிலடி தரும் வகையில் மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும் எனவும் வியூகம் வகுக்கிறது அழகிரி தரப்பு. திமுகவுக்கு போட்டியாக தினகரன் தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமையும் நிலை இருந்தது.

ஆனால் தினகரன் முகாம் இப்போது கலகலத்து கிடக்கிறது. அதிமுக- அமமுக இணையக் கூடிய வாய்ப்பும் உருவாகி உள்ளது. இதனால் தமது தலைமையில் ஒரு மெகா கூட்டணியை அமைக்கலாம் என நினைக்கிறாராம் அழகிரி.

ஜனவரி 30-ந் தேதி அழகிரி பிறந்த நாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு அமெரிக்கா செல்கிறார். அமெரிக்கா பயணத்துக்குப் பின்னர் தமது தனிக்கட்சி தொடர்பான ‘ஆட்டத்தை’ அழகிரி அறிவிக்க வாய்ப்புள்ளது என்கின்றன அவரது ஆதரவு வட்டாரங்கள்,

More News >>