பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணியா என்பது மாயை- அமித் ஷா கிண்டல்!

தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி என்பது சாத்தியமில்லை, வெறும் மாயை தான் என்று அமித் ஷா கிண்டலாக தெரிவித்துள்ளார்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.தோல்வியடைந்தது. இதனால் வரும் மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று எதிர்க்கட்சிகள் அணிதிரட்டும் முயற்சிகளில் சுறுசுறுப்பாகியுள்ளன.

காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணிக்கான அச்சாரம் சென்னையில் நடந்த கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் போடப்பட்டது. இதில் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பெயரை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.

இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்தும், வரப்போகும் பொதுத் தேர்தல் நிலவரம் குறித்தும் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கரில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்தது உண்மைதான்.

இந்த தோல்வி மாநில பிரச்னைகளின் அடிப்படையிலானது. இது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பில்லை. இந்தி பேசும் மாநிலங்களில் வெற்றிக்கு கூடுதல் கவனம் செலுத்துவோம். சிவசேனாவுடன் கூட்டணிக்கு பேச்சு நடக்கிறது. பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்கப் போவதாக கூறுவது நடக்காது. அது வெறும் மாயத் தோற்றம் தான் என்று அமித் ஷா கிண்டலடித்துள்ளார்.

More News >>