உடலை ரசித்து ஆபாசமாக ட்வீட் செய்த நெட்டிசன் கூலாக செருப்படி கொடுத்த டாப்சி!
நடிகை டாப்ஸியிடம், உங்களது உடலின் அங்கங்கள் பிடிக்கும் என ஆபாசமாக ட்விட் செய்த நெட்டிசன் ஒருவருக்கு டாப்சி அளித்த பதிலடி பாராட்டப்பட்டு வருகிறது.
ஆடுகளம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்ஸி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய சினிமாக்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.
இந்தியில் அமிதாப் பச்சனுடன் டாப்ஸி இணைந்து நடித்த பிங்க் படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தை தற்போது நடிகர் அஜித்தை வைத்து ரீமேக் செய்யவுள்ளனர்.
மேலும் இந்தியில் முன்னனி நடிகையாக வலம் வரும் டாப்ஸி, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்படக்கூடியவர். இந்நிலையில் டாப்ஸியின் ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் தவறான எண்ணத்தில் ‘உங்களது உடலின் அங்கங்கள் எனக்கு பிடிக்கும்’ என பதிவிட்டார். இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக டாப்ஸி ‘வாவ் எனக்கும் ரொம்ப பிடிக்கும் எனக்கு குறிப்பாக எனது மூளையில் உள்ள செரிப்ரம் ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு எந்த அங்கம் பிடிக்கும்?’ எனக் கேட்க, அந்த ஆள் எஸ்கேப் ஆனார்.
செரிப்ரம் என்றால் பெருமூளை. தன்னிடம் தவறான எண்ணத்தில் பேசிய நபரின் பெருமூளை வேலை செய்யவில்லை என்னும் விதமாக இந்த ட்விட் அமைந்துள்ளது. இப்படி கூலாக பதில் செய்து, ஆபாச எண்ணம் கொண்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த டாப்ஸிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.