கட்டடத்தின் உச்சியில் இருந்து பண மழை பொழிந்த கோட்டீஸ்வரர் கைது - வீடியோ

ஹாங்காங்கில் கட்டடத்தின் உச்சியில் நின்று கொண்டு டாலர் நோட்டுகளை வீசிய கோடீஸ்வரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாங்காங்கை சேர்ந்தவர் வோங் சிங் கிட் (வயது 24). இவர் கிரிப்டோ கரன்ஸி பிட்காயின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளார். டிசம்பர் 16ம் தேதி ஞாயிறன்று பிற்பகலில் வோங் தமது லம்பாகினி என்னும் சொகுசு காரில் பணக்கட்டுகளுடன் ஷாம் சூய் போ என்னும் பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள கட்டடம் ஒன்றின் மேல் ஏறிய அவர், கீழே நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது ஹாங்காங் டாலர்களை வீசியுள்ளார். சாலையில் நடந்து சென்றவர்கள் திடீரென தங்கள் கைகளில் கொட்டிய பண மழையை கண்டு திகைத்துப் போயுள்ளனர்.

வோங் சிங் கிட் இந்த வீடியோவை கிரிப்டோ கரன்ஸி குறித்த தமது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். பணக்காரர்களிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவுவதற்காகவே தாம் இப்படி செய்ததாக வோங் கூறியுள்ளார். அவர் வீசியெறிந்த 2 லட்சம் ஹாங்காங் டாலர் இந்திய மதிப்பில் 18 லட்சம் ரூபாய்க்கு சமமாகும். வோங் சிங் கிட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வோங் சிங் கிட் பிறரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர் என்றும் மக்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற வணிக நோக்கிலேயே அவர் இப்படி நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

More News >>