ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?
சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் ரஜினி வைத்து இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகி என்ற தகவல் கசிந்துள்ளது.
காலா, 2.0, பேட்ட என விஜய்சேதுபதிக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ரஜினி தொடர்ந்து இறங்கி நடித்து வருகிறார்.
பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள நிலையில், மீண்டும் லைகா புரடக்ஷனில் ரஜினி நடிக்கவுள்ளார். சர்கார் படத்தை தொடர்ந்து இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்திற்கு நாற்காலி என்ற தலைப்பும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால், இவற்றை எல்லாம் இன்னும் லைகா தரப்போ, ஏ.ஆர். முருகதாஸ் தரப்போ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பேட்ட படத்தின் ரிலீசுக்காக அமைதி காத்து வருகின்றனராம்.
பொங்கலுக்கு டபுள் ட்ரீட்டாக தலைவர் 166வது படத்தின் அதிகாரப்பூர்வமான அப்டேட்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.