நிழல் பதியம் சார்பில் 54வது குறும்பட பயிற்சி பட்டறை
புதுவை டோல்கேட் அருகே நிழல் பதியம் சார்பில் 54வது குறும்பட பயிற்சி பட்டறை வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.
நிழல் பதியம் சார்பில் ஆண்டுதோறும் குறும்பட பயிற்சி பட்டறை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 54வது குறும்பட பயிற்சி பட்டறை வரும் டிசம்பர் மாதம் 24ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சி பட்டறையில், நடிப்பு, ஒளியமைப்பு, இயக்கம், திரைக்கதை, கேமரா, மேக்கப் உள்பட ஒரு திரைப்படம் இயக்க தேவையான மற்றும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் முதல் இங்கு சொல்லித்தரப்படுகிறது.
76 மணி நேர பயிற்சிக்கு பிறகு மாணவர்களே படம் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு நிழல் பதியம் அளிக்கிறது.
குறும்பட பயிற்சி பட்டறை அசிஸ்ட் வேல்ட், ரெக்கார்ட், பால்மிரா, அரபிந்தாவன், ஆரோவில், திண்டிவனம் மெயின்ரோடு, புதுவை டோல்கேட் என்ற இடத்தில் நடைபெறுகிறது.