மாரி 2: சனிக்கிழமை, அடிதாங்கியின் கலாட்டா புரோமோ வெளியீடு!

தனுஷின் மாரி 2 படத்தின் காமெடி நடிகர்களான ரோபோ சங்கர் மற்றும் வினோத்தின் காமெடி புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மாரி படத்தின் முதல் பாகத்தில் இருந்து மாரி 2ம் பாகத்திலும் தொடரும் கதாபாத்திரங்களான மாரியின் அல்லக் கைகளான சனிக்கிழமை மற்றும் இடிதாங்கி கதாபாத்திரங்களின் கலாட்டா புரமோஷன் வீடியோவை உண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர், வினோத் என பலரும் நடித்துள்ள மாரி 2 படம் நாளை ரிலீஸாகிறது.

இந்நிலையில், படத்தை புரமோட் செய்யும் விதமாக படத்தில் இடம்பெற்றுள்ள ரோபோ சங்கரின் நகைச்சுவை காட்சி ரிலீசாகியுள்ளது.

அதில், சனிக்கிழமை என்ற தனது பெயருக்கு விளக்கம் தரும் ரோபோ சங்கர், எல்லாரும் என்னை சனி.. சனி என தான் கூப்பிடுவாங்க.. ஆனா? இடிதாங்கி மட்டும் தான் என்ன சனி அண்ணே.. சனி அண்ணே என கூப்பிடுவான் எனக் கூற,

ரோபோவின் அருகே வரும் இடிதாங்கியும் சனி அண்ணே எனக் கூறிவிட்டு, போகும் போது.. சனியனே என கூப்பிட்டு காமெடியில் கலங்கடித்துள்ளார்.

More News >>