தேவையற்ற தொலைபேசி அழைப்புகளில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்!

ஸ்பேம் கால் எனப்படும் தேவையற்ற மற்றும் தொந்தரவு தரும் தொலைபேசி அழைப்புகளின் (spam calls)எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் இந்தியா இரண்டாமிடம் வகிப்பதாக ட்ரூகாலர் (Truecaller) நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொபைல் போன்களில் நம்மை அழைப்பவர் யார் என்று அறிந்து கொள்ள உதவும் மென்பொருள் ட்ரூகாலர். இந்த நிறுவனம் 2018ம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிக எண்ணிக்கையில் ஸ்பேம் கால்கள் செய்யப்படும் 20 நாடுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிரேசில் முதலிடம் பிடித்துள்ளது.

உலக அளவில் ஒருவருக்கு வரும் நான்கு அழைப்புகளில் ஒன்று தேவையற்ற அழைப்பாக இருக்கிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் பிரேசிலில் இவ்வகை அழைப்புகளின் எண்ணிக்கை 81 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 2017ம் ஆண்டு, 3 விழுக்காடாக இருந்த இந்த எண்ணிக்கை 7 விழுக்காடாக, அதாவது ஏறத்தாழ இருமடங்காக உயர்ந்துள்ளது. 7 விழுக்காடு அழைப்புகளில் இந்திய மக்கள் 6.1 விழுக்காடு அழைப்புகளுக்கு பதில் தந்துள்ளனர். மாதத்திற்கு இந்தியர் ஒருவருக்கு 22.3 ஸ்பேம் கால்கள் வருவதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டை விட இந்தியாவில் இந்த அழைப்புகளின் எண்ணிக்கை 1.5 விழுக்காடு குறைந்துள்ளது. செல்போன் பயனர்களுக்கான மாதாந்திர கட்டணம் குறைந்துள்ளதால் பெரும்பாலும் ஒரே நபர் இரண்டு எண்களை வைத்துள்ளதால், அழைப்புகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் செய்யப்படும் ஸ்பேம் கால்களில் 91 விழுக்காட்டு அழைப்புகள் மொபைல் போன் நிறுவனங்களிலிருந்து வருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

2018ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 2020 கோடி தேவையற்ற அழைப்புகளை தங்கள் நிறுவனம் அடையாளம் கண்டு தடை (block) செய்துள்ளதாக ட்ரூகாலர் நிறுவனம் ஆண்டறிக்கையில் கூறியுள்ளது.

More News >>