வாயில் சிறுநீர் கழித்த நடிகர் பரபரப்பு தகவலை வெளியிட்ட விஜய்சேதுபதி?
புதுப்பேட்டை படத்தில் அடியாளாக நடிக்கத் தொடங்கிய நடிகர் விஜய்சேதுபதி சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் பேட்ட படத்தில் மோதும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
இந்நிலையில், தனது முதல் படமான வர்ணம் படத்தின் முதல் காட்சி குறித்து பேட்ட படத்திற்கான புரமோஷன் பேட்டியில் விஜய்சேதுபதி மனம் திறந்துள்ளார்.
சாதி வெறியை பற்றிய வர்ணம் படத்தில், விஜய்சேதுபதி கீழ் சாதிக்காரராக நடித்துள்ளார். அவரது முதல் காட்சியில் அவர் வாயில் ஒரு நடிகர் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டதாம்.
தத்ரூபமாக எடுக்கப்பட்ட அந்த காட்சியை நடித்து முடித்தபோது, அங்கிருந்த படக்குழுவினர் மொத்தமும் விஜய்சேதுபதியை பாராட்டினார்களாம். ஒரு நடிகனை ஊக்குவிப்பது பாராட்டுக்களே என தனது முதல் காட்சி குறித்த அரிய தகவலை விஜய்சேதுபதி பகிர்ந்துள்ளார்.
விஜய்சேதுபதியின் 25வது படமான சீதக்காதியில் 80 வயது முதியவராக நடித்துள்ளார். வெறும் 40 நிமிடங்களே வரும் கதாபாத்திரம் என்றாலும், கதையின் முக்கியம் அறிந்து நடித்துக் கொடுத்துள்ளார். கலையின் மீது அவருக்கு இருக்கும் காதல் 96 ராமின் காதலை விட பெரியது என்பதை பலருக்கும் சீதக்காதி படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.