2.0 படத்தின் கிளைமேக்ஸ் பாடலை ரிலீஸ் செய்த லைகா நிறுவனம்!

ரஜினியின் 2.0 படத்தில் இடம்பெற்ற கிளைமேக்ஸ் பாடலான ராஜாளி வீடியோவை லைகா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 450 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட 2.0 திரைப்படம் 1000 கோடிகளை நெருங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், படத்தின் கிளைமேக்ஸில் வரும் 3.0 ரோபோவின் ராஜாளி நீ காலி பாடல் வீடியோவை எடிட் செய்து லைகா நிறுவனம் யூடியூபில் வெளியிட்டுள்ளது. படத்தின் டீஸரில் கூட காட்டாத பல காட்சிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளதால், இதனை ரஜினி ரசிகர்கள் இந்தியளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

நாளை 5 படங்கள் வெளியாகும் நிலையில், பாலிவுட்டிலும் ஜீரோ படம் ரிலீசாகிறது. இதனால், இதற்கு மேல் பல திரையரங்குகளில் இருந்து 2.0 தூக்கப்படும், இதனால், தற்போது இந்த பாடல் காட்சி வெளியாகியுள்ளது.

More News >>