அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நியமனம்

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஷ் வர்த்தன் ஸ்ரீங்கலா நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியான ஹர்ஷ் வர்த்தன் தற்போது வங்க தேசத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறார்.

இதுவரை அமெரிக்காவில் இந்திய தூதராக இருந்து வந்த நவ்தேஜ் சர்னா மாற்றப்பட்டுள்ளார். ஹர்ஷ் வர்த்தன், 1984ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை பணியில் (Indian Foreign Service) சேர்ந்துள்ளார். விரைவில் அவர் புதிய பொறுப்பை ஏற்பார் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் பொது இயக்குநராக உள்ள ரிவா கங்குலி தாஸ், வங்கதேசத்துக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

More News >>