அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என கூறி மாட்டிக்கொண்ட டொவினோ தாமஸ்!
ஒரு பேட்டியில் பேசிய டொவினோ தாமஸ் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறியுள்ளார்.
எண்டே உம்மாண்ட பேரு படத்தில் ஹீரோவாகவும், மாரி 2 படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார் டொவினோ தாமஸ். இந்த இரு படங்களும் இன்று வெளியாகியுள்ளது.
இதனால் டொவினோ தாமஸ் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருக்கிறார். இதுவரை எந்த பெரிய பிரபலங்களின் இரு படமும் ஒரே நாளில் வெளியானதில்லை.
இந்நிலையில் டொவினோ தாமஸ் அளித்த ஒரு பேட்டியில், விஜய்யை பற்றி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலிளத்த டொவினோ தாமஸ் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினார்.
மேலும் அஜித்தை பற்றி பேசும் போது அனைவருக்கும் பிடித்தமான நடிகர் என்று கூறினார். இதனால் அஜித் வெறியர்கள் டொவினோ தாமஸ் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.