அண்ணன் மோகன் ராஜாவுக்கு போட்டியாக களமிறங்கும் ஜெயம் ரவி!
நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடிய ஜெயம் ரவி விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் யோகி பாபு நடிப்பார் என்றும் கூறியுள்ளார்.
இன்று ஜெயம் ரவி நடித்த அடங்கமறு படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தன் ரசிகர்களிடம் நேற்று டுவிட்டரில் உரையாடினார் ஜெயம் ரவி. அதில் தாங்கள் இயக்குனர் ஆகும் ஐடியா உள்ளதா? என்ற கேள்விக்கு, நான் அதற்காக கதை ஒன்றை எழுதிவருகிறேன் அதை விரைவில் படமாக்குவேன் என்று கூறியுள்ளார். மேலும், அதில் ஹீரோவாக யோகி பாபுவையே நடிக்க வைப்பதே என் சாய்ஸ் என கூறினார்.
முன்னதாக, எம்.ஜி.ஆர் பயோபிக்கில் நடிக்க வேண்டும், கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது ஆசைகளை வெளிப்படுத்திய ஜெயம் ரவி, தற்போது அண்ணன் மோகன் ராஜாவுக்கு போட்டியாக இயக்கத்திலும் ஈடுபடவுள்ளார்.