பத்திரிகையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு கொடுத்த விஜய்!
பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு சென்ற விஜய் அங்கு வந்த அனைவருக்கும் தங்க நாணயம் மற்றும் அவரது கையெழுத்து போட்ட நோட்டை பரிசாக கொடுத்தார்.
சர்கார் படத்திற்கு பிறகு அட்லி இயக்கும் புதிய படத்திற்காக ஒர்க்கவுட் செய்து வருகிறார் விஜய். சர்கார் பட சர்ச்சைகள் பூதாகரமாக கிளம்பியபோதும், ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குகள் தொடுத்த போதும், அதுகுறித்து விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை.
மேலும் 2019 ஜனவரி மாதத்திலிருந்து அட்லி இயக்கத்தில் தனது 63வது படத்தை நடிக்கவுள்ளார் விஜய். இந்த படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதற்கான லொக்கேஷனையும் அட்லி பார்த்துவருகிறார் என அந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பிரம்மாண்ட ஓட்டலில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு சென்ற விஜய், விழா முடிந்ததும் அங்கு இருந்த அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் தங்க நாணயம் ஒன்றையும் அவர் கையெழுத்திட்ட நோட்டு ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார்.