விஜய்சேதுபதியின் மலையாளப் படத்தின் டைட்டில் வெளியீடு!
மலையாளத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
விஜய்சேதுபதி நடித்த 25வது படம் சீதக்காதி. இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பேட்ட மற்றும் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
மேலும் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்திலும், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்திலும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.
இதற்கிடையே மலையாளத்தில் ஜெயராமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி. மார்கோனி மதாயி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார்.
ஜெயராமுக்கு இணையான கதாப்பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சத்யம் சினிமாஸ் நிறுவனம் சார்பாக பிரேமச்சந்திரன் ஏஜி தயாரிப்பில் சனில் கலத்தில் இந்த படத்தை இயக்கிவருகிறார்.