அனுமன் எந்த ஜாதி? பகீர் சர்ச்சை கிளப்பும் பா.ஜ.க., பிரபலங்கள்!

கடவுள் அனுமன் ஜாதி குறித்து பா.ஜ.க.வினர் நாளும் ஒரு கருத்தை அள்ளி விடுவது சர்ச்சையை அதிகரித்து வருகிறது. இராமாயணக் கதையில் ராமருக்கு பல வகையிலும் உதவியவர் அனுமன். இதனால் அனுமனுக்கும் கோயில்கள் கட்டி கொண்டாடப்படுகிறது.

சமீப காலமாக அனுமனின் ஜாதி குறித்த புதுப்புது தகவல்களை கன்னாபின்னா வென திருவாய் மலர்ந்து ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பா.ஜ.க.வினர் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். உ.பி.முதல்வர் ஆதித்ய நாத் யோகி சில தினங்களுக்கு முன் அனுமனை 'தலித்' என்று கூறி சர்ச்சையை தொடங்கி வைத்தார். அனுமன் பெயர் ரம்சான், சுல்தான், இம்ரான், புர்கான், சல்மான் என முஸ்லீம்களின் பெயர் உச்சரிப்பில் ஒத்துள்ளது.

எனவே அனுமன் இந்து இல்லை முஸ்லீம் என்று பா.ஜ.க.வின் எம்.எல்.சியான புகால் நவாப் என்பவர் வியாழனன்று புது சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் உ.பி.மாநில அறநிலையத்துறை அமைச்சர் சவுத்ரி லட்சுமி நாராயண் என்பவர் அனுமனை ஜாட் வகுப்பைச் சேர்ந்தவர் என்று இன்று கூறியுள்ளார். ஜாட் வகுப்பினருக்கு இயற்கையிலேயே முக மறியாதவர்களுக்கு கூட உதவி புரியும் குணம் உண்டு. அப்படித்தான் ராவணனால் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சீதையை பத்திரமாக மீட்டு வந்து ராமரிடம் சேர்த்தார் அனுமன் .

எனவே அனுமன் ஜாட் வகுப்பைச் சேர்ந்தவர் தான் என்று பா.ஜ.க அமைச்சர் புது குண்டு போட்டுள்ளார். அனுமனின் ஜாதி பற்றி புதுப்புது சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில் போபாலைச் சேர்ந்த துறவி ஒருவர் அனுமன் ஜைன மதத்தைச் சேர்ந்தவர் என்று கூறி சர்ச்சைக்கு மேலும் ஒரு தூபம் போட்டுள்ளார்.

More News >>