அப்பல்லோவில் ரூ.1.5 கோடிக்கு சாப்பிட்டது சசிகலா குடும்பம்தான்.... மதுசூதனன் பொளேர்

அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட காலத்தில் ரூ1.5 கோடிக்கு உணவு சாப்பிட்டது சசிகலா குடும்பம்தான் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் மதுசூதனன் கூறியதாவது:

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவின் உணவுக்கான செலவு ரூ.1.5 கோடி என்பது அபத்தமானது. அது சசிகலா குடும்பத்தினர் சாப்பிட்டதாக இருக்கும்.

75 நாட்களும் அப்பல்லோவுக்கு சென்ற என்னை ஒருமுறை கூட ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவே இல்லை. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவை நினைவு இல்லமாக்கப்பட வேண்டும். அதுதான் ஜெயலலிதாவின் விருப்பம். அவரது ஆத்மா அங்கேதான் இருக்கிறது.

தினகரனுக்கு தேன் எடுக்கத்தான் தெரியும். பிறருக்கு கொடுக்க தெரியாது. அதனால்தான் செந்தில் பாலாஜி விலகிவிட்டார்.

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்குகளைப் பெற்றார் தினகரன். ஆனால் உரிய பணத்தை தராமல் ஏமாற்றியதால் தொகுதி பக்கமே தினகரன் எட்டிப் பார்ப்பது இல்லை.

இவ்வாறு மதுசூதனன் கூறினார்.

More News >>