அஜித், விஜய்யை கலாய்த்த யோகி பாபு!

ஒரே நேரத்தில் அஜித், விஜய் ஆகிய இரு பெரிய நடிகர்களுடன் நடித்த யோகி பாபு இருவரும் எனக்கு ஒன்று தான் அவர்களை பிரித்து பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் நடிகர் யோகி பாபு. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவுக்கு ஹீரோவாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என அவர் மறுத்துவிட்டார்.

ஒரே சமயத்தில் அஜித்துடன் விஸ்வாசம், விஜயுடன் சர்கார் என இரு பெரிய படங்களை நடித்துள்ளார், யோகி பாபு. இது குறித்து அவர் பேசும் போது, ‘எனக்கு தல, தளபதி ஆகிய இருவருமே ஒன்று தான் அவர்களை தனிதனியாக பிரித்து பார்க்க முடியவில்லை. எனக்கு இருவருமே ஸ்பெஷல் தான்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ‘நான் சர்கார் படத்தில் நடிக்கும் போது விஜய்யை கலாய்த்து பேசும் ஒரு சீன் இருந்தது, நான் கலாய்த்து பேசியதையும் அவர் மனசார ஏற்றுக்கொண்டார். அதுபோல விஸ்வாசம் படத்திலும் அஜித்தை கலாய்த்து பேசும் ஒரு சீன் உள்ளது, அதற்கு அண்ணா பேசிக்கட்டுமா என்று பயத்துடன் கேட்டேன் அதற்கு என்ன இது உங்கள் வேலை பேசுங்கள் என்று கூறினார். அதனால் எனக்கு தயக்கம் போய் தைரியம் வந்தது’ என யோகிபாபு கூறியுள்ளார்.

More News >>