படங்களுக்கான டிக்கெட் விலை குறைவு!
தியேட்டரில் சென்று படம் பார்பவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் டிக்கெட் விலைகள் சரிந்துள்ளது.
திரையரங்கிற்கு வந்து தற்போது படம் பார்ப்பது மக்களிடையே மிகவும் குறைந்துள்ளது. இதற்கு பல காரணம் இருந்தாலும் தியேட்டர் டிக்கெட் கட்டணம் மிக முக்கிய காரணம்.
குடும்பத்துடன் ஒரு படத்திற்கு சென்று வரவேண்டும் என்றால் சுமார் ரூ 1000 செலவு ஆகிறது, என மக்கள் படத்திற்கு செல்வதையே குறைத்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளனர். அதாவது ரூ 100க்கு கீழ் விற்கும் டிக்கெட் 28%லிருந்து 18% ஆகவும், ரூ 100க்கு மேல் விற்கும் டிக்கெட் 18%லிருந்து 12%ஆகவும் டிக்கெட் விலை குறைந்துள்ளது.
இந்த மாற்றத்தினால் மீண்டும் மக்கள் எளிதாக படத்தை காண தியேட்டர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.