தானாகவே செத்துட்டாங்களா? போலி என்கவுன்டர் வழக்கு தீர்ப்பு குறித்து ராகுல் கடும் விமர்சனம்!

குஜராத்தில் போலி என்கவுன்டரில் சொராபுதீன், அவருடைய மனைவி கவுசர் பாய், மற்றும் கூட்டாளி ஆகியோர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சி.பி.ஐ. கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டதை காங். தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தை கடுமையாக சாடியுள்ளார்.

2O05-ல் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பாக்.தீவிரவாத குழுவுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட சொராபுதீன் சேக் , மற்றும் அவருடைய மனைவி கவுசர் பாய் ஆகியோர் ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்டு குஜராத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போல் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த தற்போதைய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கில் இருந்து அமித் ஷா, மற்றும் ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். எஞ்சிய 22 போலீஸ் அதிகாரிகளும் நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பு குறித்து நீதிமன்றத்தை கடுமையாக சாடி காங். தலைவர் ராகுல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சொராபுதீன், கவுசர் பாய், துல்சிராம் ஆகியோருடன் சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைந்த நீதிபதி லோயா உள்ளிட்ட வேறு சிலரின் பெயர்களை குறிப்பிட்டு, இவர்களை யாரும் கொல்லவில்லை, தானாகவே இறந்து விட்டார்கள் போலும் என்ற பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More News >>