தலைவர் பதவிக்கு ஆபத்து....சிங்கிள் டிஜிட் தொகுதிகள் கூட ஓகே.. ஸ்டாலினிடம் சரண் அடைந்த திருநாவுக்கரசர்- கடுப்பான ராகுல்!

கூட்டணி விவகாரத்தில் சாதித்த திமுக- திருநாவுக்கரசருக்கு எந்த நேரத்திலும் ஆப்பு! ராஜினாமா கடிதம் வாங்கினார் ராகுல்!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமை காட்டியதைத் தொடர்ந்து அவருடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்டாராம் திருநாவுக்கரசர். லோக்சபா தேர்தலில் சிங்கிள் டிஜிட்டில் கூட தொகுதிகள் ஒதுக்கி கொடுங்க... ஏற்றுக் கொள்கிறோம் என்கிற அளவில் இறங்கிப் போயிருக்கிறார் திருநாவுக்கரசர். இதையடுத்தே திருநாவுக்கரசரை டெல்லிக்கு வரவழைத்து ராஜினாமா கடிதத்தை வாங்கினாராம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

திருநாவுக்கரசர் பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படும் என நாம் முதலில் செய்தி வெளியிட்டிருந்தோம். இது தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நம்மை தொடர்பு கொண்ட காங்கிரஸ் வட்டாரங்கள் மேலும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டன. திருநாவுக்கரசரை தலைவர் பதவியில் இருந்து தூக்குவதுதான் கூட்டணிக்கு நல்லது என்கிற கருத்தை காங்கிரஸ் மேலிடத்திடம் ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதை அறிந்து கொண்ட திருநாவுக்கரசர், ஸ்டாலின் தரப்புடன் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டாராம். அப்போது, லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு இத்தனை தொகுதிகள்தான் வேண்டும் என நான் நெருக்கடி தரமாட்டேன். நீங்கள் சிங்கிள் டிஜிட் எண்ணிக்கையில் 5 அல்லது 6 தொகுதிகள் கொடுத்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம் என மேலிடத்தில் சொல்லிவிடுகிறேன்.

அதே நேரத்தில் எனக்கு வேண்டியவர்களான ரூபி மனோகரன், காஞ்சி விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கான தொகுதிகளை உறுதி செய்து கொடுங்க... என் தரப்பில் இருந்து எந்த ஒரு சிக்கலும் வராது என சரண்டராகி இருக்கிறார். இத்தகவலும் டெல்லிக்கு திமுக தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கடுப்பாகிப் போன ராகுல் காந்தி, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது டெல்லிக்கு வருமாறு திருநாவுக்கரசரை அழைத்துள்ளார். ஸ்டாலினிடம் சரணடைந்தது ஒர்க் அவுட் ஆகிவிட்டது போல என குஷியில் திருநாவுக்கரசர் டெல்லிக்கு சென்றிருக்கிறார்.

அப்போது ராகுல் கடும் கோபமடைந்து திருநாவுக்கரசரை வெளுத்து வாங்கிய கையோடு ராஜினாமா கடிதத்தையும் பெற்றுக் கொண்டாராம். இதனால் கடும் உளைச்சலுக்குள்ளான திருநாவுக்கரசர், அமெரிக்காவில் மகள் வீட்டில் ஓய்வெடுக்க புறப்படுகிறார் என்கின்றன அந்த தகவல்கள்.

More News >>