குஜராத் சட்டசபை இடைத்தேர்தல்: காங்கிரஸில் இருந்து தாவிய பாஜக வேட்பாளர் அமோக வெற்றி!

குஜராத்தில் ஒரு சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க., வெற்றி பெற்றது.

குஜராத்தின் செளராஷ்டிரா பகுதியில் உள்ள ஜோஸ்டான் தொகுதியில் காங்.சார்பில் 5 முறை வென்ற பவாலியா என்பவர் திடீரென பா.ஜ.க.வில் இணைந்து அமைச்சராகவும் ஆனார். இத் தொகுதி காலியானதால் கடந்த 20-ந் தேதி நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் பவாலியா போட்டியிட்டார்.

காங்கிரஸ் தரப்பில் அவ்சார் நாக்யா என்பவரும் போட்டியிட்டார். 3 மாநிலங்களில் பா.ஜ.க.தோல்விக்குப் பின் பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நடந்த இந்த இடைத் தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இன்று காலை ஓட்டு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தது. முடிவில் 20 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பா.ஜ.க வென்றது.

இதே போல் பா.ஜ.க ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோலி பைரா தொகுதிக்கும் 20-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இத் தொகுதி ஜார்க்கன்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வின் பதவி குற்ற வழக்கில் பறிக்கப்பட்டதால் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

More News >>