கர்நாடகத்தில் ராகுல் போட்டியா?- சித்தராமையா விளக்கம்

வரும் மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தான் ராகுல் காந்தி போட்டியிடுவார் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் பிதார் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக வெளியான செய்திக்கு சித்தராமையா இவ்வாறு பதிலளித்தார்.

மேலும், உ.பி.மாநிலம் அமேதி தொகுதி 40 ஆண்டுகளாக இந்திரா காந்தி குடும்பத்தினரின் பாரம்பரிய தொகுதி. வரும் தேர்தலிலும் அமேதியில் தான் ராகுல் போட்டியிடுவார்.

வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைப்பது உறுதி. கர்நாடக மாநிலத்திலும் அமோக வெற்றி பெறுவோம் என்றார் சித்தராமையா.

More News >>