லோக்சபா தேர்தல்: கட்சி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இக் கூட்டத்தில் கட்சியின் மேலிட நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்தும்,தேர்தல் வெற்றி வாய்ப்பு, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

More News >>