ஆட்டோ மீது லாரி மோதி கோர விபத்து: 12 பேர் பரிதாப பலி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டம் பார்னோ பிளாக் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் நேற்று இரவு ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். பல்மாதிபா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ வந்துக் கொண்டிருந்தபோது எதிரில் வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதியது.

இந்த கோர விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த 6 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்தியே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

More News >>