தலைவர் பதவிக்கு வேட்டு - ராகுல் மீது கடும் அதிருப்தி- நள்ளிரவில் மகனுடன் அமெரிக்கா புறப்பட்ட திருநாவுக்கரசர்
கூட்டணி விவகாரத்தில் சாதித்த திமுக- திருநாவுக்கரசருக்கு எந்த நேரத்திலும் ஆப்பு! ராஜினாமா கடிதம் வாங்கினார் ராகுல்!
தலைவர் பதவிக்கு ஆபத்து....சிங்கிள் டிஜிட் தொகுதிகள் கூட ஓகே.. ஸ்டாலினிடம் சரண் அடைந்த திருநாவுக்கரசர்- கடுப்பான ராகுல்!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்க ராகுல் முடிவெடுத்திருப்பதால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் திருநாவுக்கரசர். இதனால் லோக்சபா தேர்தல் பணிகளைப் பற்றி கவலைப்படாமல் மகனுடன் நள்ளிரவில் அமெரிக்காவுக்கு திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில் திருநாவுக்கரசரை நீக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் தரப்பு உறுதியாக இருந்தது. இதனால் திருநாவுக்கரசரிடம் ராஜினாமா கடிதத்தை ராகுல் வாங்கி வைத்திருப்பதை நாம்தான் முதலில் பதிவு செய்தோம்.
மேலும் திருநாவுக்கரசர் அதிருப்தியில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மகனுடன் திருநாவுக்கரசர் அமெரிக்காவுக்குப் பயணமானார்.
அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டில் திருநாவுக்கரசர் ஓய்வு எடுக்க இருக்கிறார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கான பணிகள் அனைத்தையுமே விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு செல்வதா? என்கிற கோப குரல்களும் சத்தியமூர்த்தி பவனில் வெடிக்கின்றன.
அத்துடன் ஒருவேளை தம்மை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் அறிவிப்பு வெளியானால் அமெரிக்காவில் தற்போது முகாமிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துடன் திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்தவும் வாய்ப்பிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-எழில் பிரதீபன்