விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ்!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள படம் விஸ்வாசம். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும், விவேக், தம்பி ராமைய்யா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சத்திய ஜோதி பிளிம்ஸ் தயாரித்துள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் பேட்ட படத்திற்கு யு/எ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது.

இதனால், ரஜினி மற்றும் அஜித்தின் பொங்கல் மோதல் உறுதியாகியுள்ளது.

More News >>