சீதக்காதி படத்தில் 23 நிமிடங்கள் காட்சிகள் நீக்கம்!

டிசம்பர் 20 அன்று வெளியான சீதக்காதி படத்தில் 23 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து கடந்த வாரம் வெள்ளிகிழமை அன்று வெளியான படம் சீதக்காதி. இந்த படத்தில் விஜய்சேதுபதி ஐயா ஆதிமூலம் எனும் நாடக கலைஞர் வேடத்தில் 75 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் விஜய்சேதுபதியின் 25வது படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் நான் 40 நிமிடங்கள் தான் வருவேன் என விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெறிவித்திருந்தார். அதைபோலவே 40 நிமிடம் தான் அவர் திரையில் தோன்றினார்.

ஆனால், அதன் பின்னர் அவரது ஆன்மா தான் படத்தில் நடிக்கும் என கதை வித்தியசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லாஜிக் இல்லாத இந்த கதையாலும் விஜய்சேதுபதி இல்லாத காட்சிகள் மிக நீளமாகவும் இருப்பதால், இரண்டாம் பாதியில் திரையரங்கில் உட்கார முடியவில்லை என ரசிகர்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், சீதக்காதி படத்தில் வரும் 23 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீளம் குறைக்கப்பட்ட பின்னராவது படத்தின் வசூல் சூடுபிடிக்குமா என படக்குழுவினர் எதிர்நோக்கியுள்ளனர்.

More News >>