அய்யோ.. இனி மிஷ்கினால் படம் எடுக்க முடியாதா?

கொரிய கிரைம் படங்களை காப்பியடித்து தமிழில் கிரைம் படங்களை மட்டுமே இயக்கி வரும் மிஷ்கின், இனிமேல் கிரைம் த்ரில்லர் படங்களை இயக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ரகுநந்தன் எனும் பைனான்சியர், கடந்த 2015ல் தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக கூறி மிஷ்கின் ஒப்பந்தம் போட்டார். ஆனால், இதுவரை அந்த படத்தை இயக்கவே இல்லை என சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இயக்குநர் மிஷ்கின் கிரைம் த்ரில்லர் படங்களை இயக்க தடை விதித்து உத்தரவிட்டது.

உதயநிதி ஸ்டாலினை வைத்து கிரைம் த்ரில்லர் படமான சைக்கோ படத்தை மிஷ்கின் தற்போது இயக்கி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், சைக்கோ படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வேற ஜானரில் இதுவரை படம் இயக்காத மிஷ்கினுக்கு இந்த உத்தரவு திரைத்துறையில் வழங்கப்பட்டுள்ள செக்மேட்டாகவே அமைந்துள்ளது.

More News >>