96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவா?

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவை நடிக்க வைக்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018ஆம் ஆண்டின் சிறந்த காதல் படமான 96 படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் சமந்தாவை நடிக்கவைக்கலாம் என தயாரிப்பாளர் நினைக்க திரிஷாவையே நடிக்க வைக்கலாம் என்கிறார் இயக்குனர்.

96 படம் சிறந்த அளிவில் வெற்றி பெறும் என்று அறிந்த தில் ராஜீ இந்த படத்தின் ரீமேக் உரிமத்தை பெற்றுள்ளார்.

இந்த படத்தை தமிழில் இயக்கிய பிரேம் குமார் தான் தெலுங்கிலும் இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் நடிக்கவுள்ளார். திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே பெரிய போட்டியே நடந்து வருகிறது.

ஏற்கனவே திரிஷா தெலுங்கு சினிமாவில் வளம் வந்த நடிகைதான் ஆனால் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா தான். அதனால் வியாபார ரீதியாக பிரச்சனை வராது என்பதால் படத்தின் தயரிப்பாளர் தில் ராஜீ இந்த படத்தில் சமந்தாவை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்துள்ளார்.

ஆனால், திரிஷா தான் இந்த படத்திற்கு சரியான கதாநாயகி அவரே இந்த படத்திலும் நடிக்கட்டும் என்கிறார்,இயக்குனர் பிரேம் குமார். மேலும் இந்த படத்தில் சமந்தாவா? இல்லை திரிஷா? என்பது இயக்குனரும் தயாரிப்பாளரும் சேர்ந்து முடிவெடுத்தால் தான் தெரியும்.

More News >>