ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்ய உத்தரவிட்ட குமாரசாமி - வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பு!
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகியை கொலை செய்த கொலையாளிகள் 4 பேரை ஈவு இரக்கம் பாராமல் சுட்டுக்கொல்லுமாறு போலீசாருக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிடும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகி 2 நாட்களுக்கு முன்பு 4 பேர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். கொலையான பிரகாஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் கர்நாடக முதல்வர் குமாரசாமி போலீஸ் அதிகாரி ஒருவருடன் செல்போனில் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், பிரகாஷ் நல்ல மனிதர். ஏன் கொன்றார்கள் என்றே தெரியவில்லை. கொலையாளிகளை ஈவு இரக்கம் பாராமல் சுட்டுக் கொல்லுங்கள். ஒன்றும் பிரச்னை வராது என்று பேசுகிறார். இந்த வீடியோ செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ரகசியமாக கிடைத்து வெளியில் கசிந்துள்ளது. இந்த வீடியோ குறித்து குமாரசாமியிடம் கேட்டபோது, நான் உத்தரவு ஏதும் போடவில்லை.
கொலையாளிகள் 4 பேரும் ஏற்கனவே இரு கொலைகளைச் செய்து ஜெயிலில் இருந்தவர்கள். பெயிலில் வந்து இந்தக் கொலையையும் செய்துள்ளனர். பெயிலை இப்படி தவறாக பயன்படுத்துகிறார்களே என்று தான் பேசினேன் என்று மழுப்பியுள்ளார்.