கொழும்பில் பயங்கரம்- மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
இலங்கை தலைநகர் கொழும்பில் மர்ம நபர்கள் இருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பு தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடி துறைமுகப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் கொழும்பில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.