நியூ இயருக்கு முன்னாடியே ரிலீசாகும் பேட்ட டிரைலர்!
சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட டிரைலர் வரும் டிசம்பர் 28ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்திலும் கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதால், அதற்கு சென்சார் போர்டு மியூட் கொடுத்துள்ளதாகவும், அதிக வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழையும் தணிக்கைக் குழு முன்னதாக வழங்கியது.
வரும் ஆங்கில புத்தாண்டுக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 28ம் தேதியே படத்தின் டிரைலர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
இதனால், ரஜினி ரசிகர்களுக்கு முன்கூட்டியே புத்தாண்டு பரிசு கிடைக்கவுள்ளதால் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.